சீனாவைத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும் பிரிட்டன்
இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், மூன்று லட்சத்தைக் கடந்த கொரோனா தினசரி பாதிப்புகளும், இரண்டாயிரத்தைக் கடந்த உயிர்பலியும் உலக நாடுகளின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது.
கொரோனா பாதிப்பால் பல நாடுகளும் இந்தியாவிற்கான தங்களது விமானங்களை ரத்து செய்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அல்லாடிக் கொண்டிருக்கும் இந்தியாவிற்கு சீனா உதவி செய்ய முன் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, பிரிட்டனும் உதவிக் கரம் நீட்டத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “
கொரோனாவின் 2வது அலையுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் எந்த வகையில் உதவி செய்யலாம் என பார்க்கிறோம். இந்தியா எங்களின் சிறந்த நட்பு நாடு பிரிட்டனின் உதவியானது வெண்டிலேட்டர்கள் அல்லது சிகிச்சை தொடர்பானதாக இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.