திருடனா இருந்தாலும் அவனுக்கும் மனிதநேயம் இருக்கு… ஹரியாணாவில் அரங்கேறிய வினோத சம்பவம்!
கொரோனா அதிகரித்து வரும் சூழலில் ஹரியாணாவில் மருத்துவமனை ஒன்றில் திருடன் ஒருவன் மருந்து மற்றும் தடுப்பூசிகளை திருடியுள்ளான். அதன் பின் தான் திருடியது கொரோனா தடுப்பூசிகள் என்று தெரிந்தவுடன் மீண்டும் மருத்துவனைக்குச் சென்று அவன் திருடிய 1270 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மற்றும் 440 கோவாக்ஸின் தடுப்பூசிகளையும் திரும்ப வைத்துள்ளான்.
மேலும், தான் திருடியது கொரோனா தடுப்பூசிகள் என்பது எனக்குத் தெரியாது எனவும் தெரிந்திருந்தால் திருடியிருக்கவே மாட்டேன் எனவும் கூறியுள்ளான். இந்த வினோத சம்பம் மருத்துவமனையில் சிறிது நேரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.