தற்கொலைக்கு முயன்றவர் ஆக்ஸிஜன் மேன் ஆன கதை தெரியுமா?
பீகாரைச் சேர்ந்த கவுராய் என்பவர் கடந்த 2019-ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். தற்கொலை செய்ய முயன்ற கங்கை நதிக்கரைக்குச் சென்று பின் தனது முடிவை மாற்றிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல் மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியவர் தான் இந்த கவுரவ் ராய். இன்று பலரின் உயிரை காத்து வருகிறார்.
52 வயதாகும் கவுரவ் ராய் கடந்தாண்டு ஜூலை மாதம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா முதலாவது அலை உச்சத்தில் இருந்த நேரம் அது. கவுரவ் ராய்-க்கு பாட்னா மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்கவில்லை. படிக்கட்டுகளுக்கு கீழேதான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவருக்கு ஆக்ஸிஜன் அளவும் குறைந்துள்ளது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார். 5 மணி நேரத்துக்கு பிறகு அவரது மனைவி ஆக்ஸிஜன் சிலிண்டரை ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளார்.
இதனால் தனக்கு ஆக்ஸிஜன் இல்லாமல் இருந்தபோது ஏற்பட்ட துன்பத்தினை யாரும் அனுபவிக்கக் கூடாது என முடிவு செய்தார். தனது சொந்த பணத்தில் பாட்னாவில் தங்களது குடியிருப்புக்குக் கீழ் சிறிய ஆக்ஸிஜன் வங்கியை உருவாக்கினர். இந்த தகவல் ட்விட்டர். ஃபேஸ்புக் மூலம் அவர்களது நண்பர்களால் பரவியது. 10 ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தொடங்கப்பட்டது இன்று 200 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டுள்ளது.
இதன்மூலம் ஆக்ஸிஜன் தேவை உள்ளவர்களுக்கு தானே தனது காரின் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர் கொடுத்து உதவி வருகிறார். இதன்மூலம் பலரது உயிரைக் காப்பாற்றிய மனநிறைவு ஏற்படுள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் கவுரவ் ராய்.