தொற்று அதிகரிக்கவே செய்யும் – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் வேகம் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. தமிழக அரசு பல பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறது. சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் செயல்பட்டு வரும் கொரோனா பரிசோதனை மையத்தை பார்வையிட்ட பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “தொற்று பாதிக்கப்பட்டோரில் 50 சதவீதம் பேரை பரிசோதனை மையத்தில் வைத்து சிகிச்சை கொடுப்பதே இலக்கு. பாதிப்பு ஏற்பட்ட உடன் அனைவரும் பெரிய மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் தொற்றின் பாதிப்புக்கு ஏற்ப மருத்துவரின் அறிவுரைப்படி செயல்பட வேண்டும்.

சென்னையில், அடுத்த 25 நாட்களுக்கு தொற்று பாதிப்பின் வேகம் அதிகமாகத் தான் இருக்கும். மக்கள் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *