கேரளாவைத் தொடர்ந்து உ.பி யிலும் தடுப்பூசி இலவசம்!

இந்தியாவில், காட்டுத் தீயாய் பரவி வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய முயற்சியை எடுத்துள்ளது.

இதுவரை, கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பு 45 ஆக இருந்தது. ஆனால், பிரதமர் மோடி அவர்கள் மே 1 ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருக்கிறது.

கேரளாவில், மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு போடப்படும் தடுப்பூசி இலவசம் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதனைத் தொடரந்து, உத்தர பிரதேசத்திலும் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன் பின், தனது ட்விட்டர் பக்கத்தில், “மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும், இதன் மூலம் கொரோனா தோல்வி அடையும், இந்தியா வெல்லும் என்றும் பதிவிட்டுள்ளார்.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் இந்த அறிவிப்பு நாட்டில் தடுப்பூசி போடும் நடவடிக்கையை மேலும் அதிகரிக்க உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *