பேருந்துகளில் கொரோனா விதிகள் பின்பற்றப்படுகிறதா?
கொரோனா வைரஸின் இரண்டாவது பரவலைத் தடுக்க தமிழக அரசு பல புதிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறது. அதன்படி, பேருந்துகளின் இருக்கைகளில் உட்கார்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும் என கட்டுப்பாட்டை விதித்தது.
ஆனால், பேருந்துகளில் இந்த பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளில் பாதி பேர் முகக்கவசம் கூட அணிவது இல்லை. நடத்துநர்களும் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
சென்னை மட்டுமல்லாமல் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இதே நிலை தான் நீடித்து வருவதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.