அறிமுகமகிறதா நான்கவது தடுப்பூசி?
இந்தியாவில், தற்போது கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறது.
அந்த வகையில், மே 1 ஆம் தேதி முதல் 18 வயதை நிரம்பியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது, கோவிட்ஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டும் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, நான்காவதாக ஒரு தடுப்பூசியும் வரும் நிலை உருவாகியுள்ளது.
’பயாலாஜிக்கல் இ’ நிறுவனத்தின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனைமுடிவுகள் கிடைத்தவுடன் பொதுமக்கள் அதை செலுத்திக் கொள்ளலாம்.ஆகஸ்ட் மாதத்தில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.