இதுக்கு இல்லயா சார் ஒரு எண்டு!

இந்தியாவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா வைரஸ் தற்போது, மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சம், இரண்டு லட்சம் என அதிகரித்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று லட்சத்தைத் தொட்டுள்ளது.

நேற்று மட்டும் புதிதாக 2,95,041 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,16,130 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழப்பும் அதிகரித்து வருவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,023 பேர் இறந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *