கடைசி ஆயுதம் தான் முழு ஊரடங்கு – பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுபடுத்துவது குறித்து நாட்டு மக்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். அப்போது, ”கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் மீண்டும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளோம். ஆனால், நாம் நினைத்தால் இந்த நெருக்கடி காலத்தை கடக்க முடியும். கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் பொறுமையை இழந்து விடக் கூடாது.

மே 1 முதல் 18 வயது நிரம்பியோருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புலம்பெயர் தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களிலேயே இருக்க மாநில அரசு நடவடிக்க எடுக்க வேண்டும்.

வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மக்களின் விழிப்புணர்வும் உள்ளது. முடிந்த வரை மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்கலாம். முழு ஊரடங்கு என்பது கடைசி ஆயுதம் தான். தேவைப்பட்டால் அந்த கடைசி ஆயுதத்தை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *