இஸ்ரேலைப் போல நாமும் மாற வேண்டும் – சென்னை மாநகராட்சி ஆணையர்

தமிழகத்தில், பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஏற்ப தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கான பாதுகாப்பு மையங்களும் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை தரமணியில் 900 படுக்கைகள் கொண்ட 13 ஆவது கொரோனா பாதுகாப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார். அதன்பின், செய்தியாளர்கள் சந்தித்த பிரகாஷ், “

மே 1-ம் தேதியிலிருந்து 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அப்போது இன்னும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது இன்னும் வேகமெடுக்கும். கரோனா தடுப்பூசி அறிவியல் ரீதியில் பாதுகாப்பானது.

இஸ்ரேலில் 68%-க்கும் மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், முகக்கவசம் செலுத்த வேண்டிய அவசியமில்லாத சூழல் உள்ளது. அங்கு கரோனா தொற்றும் இல்லை, உயிரிழப்பும் இல்லை. அந்த நிலையை நாம் சீக்கிரமாக அடைய வேண்டும். ஏனென்றால் இயல்பு வாழ்க்கை முக்கியம். இயல்பு வாழ்க்கையைக் கொண்டு வருவது நம் கையில்தான் உள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும். நம் வாசலுக்கு அருகிலேயே கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதனைப் போட்டுக்கொள்ள வேண்டும்

28 ஆயிரத்து 5 பேர் தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகள், கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்சை பெற்று குணமடைவோரின் பெயர்களைப் பட்டியலில் இருந்து எடுத்துவிடுவோம்.

வீட்டுத் தனிமையில் உள்ளவர்களின் பெயர்களை 10 நாட்கள் கழித்து தானாகவே நாங்கள் எடுத்துவிடுவோம்.தனிமைப்படுத்துதல், வீட்டுக்கு வீடு சர்வே ஆகியவற்றை இன்னும் தீவிரப்படுத்த உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *