தெலுங்கானாவில் ஏப் 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு

இந்தியா முழுவதும் கொரொனா தொற்று வேகமாக பரவி வாருகிறது. அதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் தெலுங்கானா மாநிலத்திலும் கொரொனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால், அம்மாநில அரசு இரவு முழு ஊரடங்கு பிறப்பித்தது. தினமும், இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தெலுங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் உணவகங்கள்,கடைகள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *