10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற விரும்புபவர்களுக்கு மட்டும் தனித் தேர்வு!
தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பைத் தவிர அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு ஆணையிட்டது. இதனைத்தொடர்ந்து, கொரோனா அதிகமாக பரவும் சூழ்நிலையில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்ணான 35 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்காக தனித் தேர்வினை நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விரும்பும் மாணவர்கள் மட்டும் இந்த தேர்வினை எழுதலாம், அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.