ஆக்ஸிஜன் தேவை அதிகரிப்பால் தொழிற்சாலைகளில் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

இந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இருந்தாலும், கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதால் ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா நாடு முழுவதும் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். அதில், முதல் அலையில் 41.1 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. இது, இரண்டாவது அலையில் 54.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இது நிகழ்கிறது. ஆக்ஸிஜன் மட்டுமல்லாமல் வெண்டிலேட்டர் தேவையும் அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, 9 தொழிற்சாலைகளில் மட்டும் தான் இனி ஆக்ஸிஜன் பயன்படுத்த முடியும். மற்ற தொழிற்சாலைகளில் சிலிண்டர்களின் விநியோகத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.