மனைவிக்கு கொரோனா , தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட முதல்வர்!
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகள் டெல்லியில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 23,686 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 240 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மனைவிக்கு தொற்று உறுதியானதையடுத்து தன்னை அரவிந்த் கெஜ்ரிவால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.