குழந்தைகளுக்கும் பரவும் கொரோனா! பெற்றோர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலையின் வேகம் அதிகரித்து வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையின் பாதிப்பும், பரவும் வேகமும் அதிகமாக இருப்பதால் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை இளைஞர்களைத் தான் அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று முதல், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால், தற்போது குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று பரவுவது மக்களிடம் அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் ஒன்றரை வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.