உயர்நீதிமன்றத்தை மதிக்காத உத்திரபிரதேசம்!

நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வருகின்றன. ஆனால் உத்திரபிரதேசம் அதற்கு முரணாக செயல்பட்டு வருகிறது.
உத்திரபிரதேசத்தின் முக்கிய நகரங்களில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அரசு எந்த ஒரு ஊரடங்கு குறித்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட 7 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை ஏற்காமல் உத்தர பிரதேச மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டு வருகிறது.
பிரயாக்ராஜ், லக்னோ, வாரணாசி, கான்பூர், கோரக்பூர் ஆகிய இடங்களில் ஊரடங்கை அமல்படுத்த அரசு மறுத்துள்ளது.