தெலுங்கானா முதல்வருக்கு கொரோனா உறுதி!
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து சந்திரசேகர ராவ் பண்ணை வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.