பேருந்துகளுக்கான இரவு நேர கட்டுப்பாடுகள் என்னென்ன?

இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் தமிழகத்திலும், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக்கட்டுப்படுத்த தமிழக பல புதிய பாதுகாப்பு வழிமுறைகளை அமல்படுத்தியது.

ஆனால், அப்போதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தற்போது இருப்பதைக் காட்டிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

இந்த புதிய கட்டுபாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதில் கூறியுள்ள படி, தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையும் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நாள் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், இரவு நேர போக்குவரத்துக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் என்ற கேள்வி மக்களிடம் எழுத்துள்ளது. இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை. வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அரசு பேருந்துகளில் ஞாயிறு மற்றும் இரவு நேர பயணங்களுக்கான முன்பதிவு கட்டணம் திருப்பி செலுத்தப்படும் எனவும் இரவு நேர பேருந்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு பகல் நேர பேருந்துகளில் மாற்றி வழங்கப்படாது என போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *