மூன்று லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு!
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இதுவரை இல்லாத அளவில் வேகமாகப் பரவி வருகிறது. மக்களை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எனினும் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை புதிய உச்சதைத் தொட்டு வருகிறது. தினசரி பாதிப்பின் எண்ணிக்கை ஒரு லட்சம் இரண்டு லட்சத்தைக் கடந்து தற்போது மூன்று லட்சத்தை நெருங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.73 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், பலி எண்ணிக்கை 1,619 ஆக உள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.