மன்மோகன் சிங் கடிதத்துக்கு தக்க பதிலடி கொடுத்த ஹர்ஷ் வர்தன்!

நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனையடுத்து அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கும் மற்றும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்ட போதிலும் சில மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் மத்திய அரசு ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசரப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு தடுப்பூசி திருவிழாவாக ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை அனுசரித்தது. தடுப்பூசி போடுவது பல மாநிலங்களிலும் விரைவுபடுத்தப் பட்டு வருகிறது.

இன்று முன்னாள் பிரதர் மன்மோகன் சிங் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசித் திட்டமே முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.மேலும், நாட்டில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதை கவனிக்காமல் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மன்மோகன் சிங்கின் இந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசியுள்ளார். அரசு கொரோனா தடுப்பூசிகளை விரைந்து செலுத்தி வருகிறது ஆனால் காங்கிரஸ் தடுப்பூசி குறித்து சந்தேகங்களை மட்டுமே எழுப்பி வருகிறது என விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *