இவர்களை முக்கியமாக தனிமைப் படுத்துங்கள்…டெல்லி அரசு அதிரடி!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசி வருகிறது.இதனையடுத்து அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.தலைநகர் டெல்லியிலும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது.இதனால் டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் இன்று டெல்லி அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளாவுக்கு சென்று திரும்புவோரை 14 நாட்களுக்கு தனிமைப் படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பமேளாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மற்றும் சில துறவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசு ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 30 வரை கும்பமேளாவிற்கு சென்று திரும்பும் அனைவரையும் கண்காணிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *