கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு மீண்டும் கொரோனா உறுதி!
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காட்டுத்தீயைப் போல் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், மக்கள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்த வரிசையில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் இணைந்துள்ளார்.
மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரான தலைவர் குமாரசாமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தொற்று உறுதியானதால் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.