கர்நாடக முதல்வர் எடியூரப்பா மருத்துவமனையில் அனுமதி!

கர்நாடக முதல்வர் எடியூரப்பா காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காய்ச்சலின் காரணமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என கூறப்பட்டது.
கொரோனா தொற்று உறுதியாகாத போதும் முதல்வர் எடியூரப்பாவுக்கு காய்ச்சல் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.இதனையடுத்து அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்போது பெங்களூருவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.