தமிழகத்தில் +2 செய்முறைத் தேர்வு தொடங்கியது!

தமிழகத்தில் கொரோனா கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது.இதனால் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.இதனையடுத்து பல மாநிலங்களில் தேர்வினை ஒத்திவைத்தும், ரத்து செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தொடங்கியுள்ளது.இந்த செய்முறைத் தேர்வு ஏப்ரல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 31 வரை நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாக மாணவர்களுக்கு இந்த செய்முறைத் தேர்வு நடத்தப்படுத்துகிறது.செய்முறைத் தேர்வு பாதுகாப்பான முறையில் எளிமையாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.மேலும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் செய்முறைகள் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பில்லாத எளிய செய்முறைகளே கொடுக்கப்படுகின்றன.
செய்முறைத் தேர்வை நடத்தும் அதே நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு கொரோனா விதிமுறைகளை சரிவர கடைபிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும்,செய்முறைத் தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப் பெற்றால் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.