இரண்டு லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்தியாவில், கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. மேலும், முதல் அலையை விட இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், கொரோனாவிற்கு எதிரான பாதுகாப்பு நடைமுறைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை தாங்களே விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், நேற்று கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்தைத் தாண்டியிருந்தது. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையின் பாதிப்பின் வேகம் அதிகமாக இருப்பதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதற்கு, அடுத்த படியாக இந்தியா தான் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவால் உயிரழந்தோரின் எண்ணிக்கை 1.038 ஆக உள்ளது.