கொரோனா பாதிப்பால் சென்னையில் 18 விமான சேவைகள் ரத்து
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசு பல பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியுள்ளது.
இந்தியாவில், தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது. சென்னையிலும், தினசரி பாதிப்பு எட்டாயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், விமான சேவையைப் பயன்படுத்துபவர்களின் விகிதம் பாதியாகக் குறைந்துள்ளது. எனவே, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.