இவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடுங்கள்… மத்திய அரசிற்கு டெல்லி முதல்வர் கடிதம்!
நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனையடுத்து அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.மேலும்,தடுப்பூசி செலுத்துவதையும் அனைத்து மாநிலங்களும் விரைவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் பத்திரிக்கையாளர்களை முன்களப் பணியாளர்களாக கருதி அவர்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பத்திரிக்கையாளர்கள் தங்களது உயிரையும் பெரிதாக கருதாமல் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதனால் அவர்களுக்கு முன்களப் பணியாளர்கள் போன்று முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.