திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில், கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. உலகளவில் கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் என யாரும் கொரோனா பாதிப்பிற்கு தப்பவில்லை.
குறிப்பாக, வயதானவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவுக்கு நேற்று கொரோனா தொற்று பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.