மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு!
இந்தியாவில், கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை அனைத்து மாநிலங்களிலும் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பு உச்சமடைந்துள்ளது.
அங்கு, தினசரி கொரோனா பாதிப்பு அறுபதாயிரத்தை நெருங்கிய நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றிய போதிலும் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே, “இன்று காலை 8 மணி முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதுவரை 144 தடை உத்தரவு அமலில் தான் இருக்கும். இந்த 15 நாட்களுக்கும் உணவில்லாத 7 கோடி ஏழை மக்களுக்கு உணவழிக்கப்படும்.
முழு முடக்கத்தில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், தேவையின்றி ரயில் மற்றும் பேருந்து பயணங்களைத் மேற்கொள்ளக் கூடாது. மேலும், பெட்ரோல் பங்குகள் செயல்படும் என்றும் மருத்துவ பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மக்கள் தாமாகவே முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்தியாவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.