காட்டுத்தீயாய் பரவும் கொரோனா! ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை
இந்தியாவில், கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,84,372 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
நேற்று, ஒரு நாளில் மட்டும் 1,027 பேர் உயிரிழந்ததால், கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,72,085 ஆக உயர்ந்துள்ளது.