10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கும் இந்திய மாநிலம்….மோசமாகும் மாணவர்களின் கல்வி!
கொரோனா ;பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது.அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கொரோனா பரவலின் தாக்கத்திற்கு ஏற்ப பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.ஆனால்,கொரோனாவின் தீவிரம் குறையாதால் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்பிக்கப்படும் என பல மாநிலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்தன.
இருப்பினும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுவதில் நடைமுறை சிக்கல் வந்த வண்ணமே இருந்தன.மாணவர்களுக்கு மொபைல் மற்றும் இணைய வசதி இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.இதனையடுத்து பல மாநிலங்களும் மாணவர்களுக்கு இணைய வசதியுடன் கூடிய டேப்லட் வழங்க முன்வந்தது.
கடந்த ஆண்டு கொரோனாவால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் அதே நிலை தொடர்கிறது.பல மாநிலங்களும் கொரோனா பரவலினால் மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி என அறிவித்துள்ளது.
அந்த வரிசையில் தற்போது ராஜஸ்தானும் இணைந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் 8,9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது.மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை கொரோனா பரவலின் காரணத்தால் ஒத்திவைப்பதாகவும் அறிவித்துள்ளது.
புதிய தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.