கொரோனாவிலிருந்து மீண்டார் கேரள முதல்வர்!

நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அந்த வரிசையில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் பாதிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி கொரோனால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று கொரோனா தொற்றிலிருந்து பினராயி விஜயன் மீண்டுள்ளார்.இதனை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

கொரோனாவிலிருந்த குணமடைந்த முதல்வர் பினராயி விஜயன் விரைவில் வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *