உயிரோடு வன விலங்குகளை விற்பதற்கு தடை – உலக சுகாதார நிறுவனம்!

உலக சுகாதார நிறுவனம் வன விலங்ககுகள் விற்பனை குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில் வனவிலங்குகளை சந்தையில் உயிருடன் விற்பதற்கு தடைவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

வனவிலங்குகளின் மூலம் புதிய வைரஸ்கள் பரவுவதால் இந்த புதிய தடையை உலக சுகாதார நிறுவனம் விதித்துள்ளது.தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸும் வனவிலங்குகளிடமிருந்தே பரவியுள்ளது.

வனப்பகுதியில் பிடிபடும் விலங்குகளை உரிய அனுமதியின்றி விற்பதன் மூலம் விலங்குகளிடமிருந்து வைரஸானது எளிதில் மனிதர்களுக்கு பரவுகிறது.உலகில் புதிதாக காணப்படும் வைரஸ்களில் 70 சதவீதத்திற்கு மேல் வன விலங்குகளிடமிருந்தே பரவுகின்றன.

அனைத்து நாடுகளும் இந்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை சரிவர கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *