மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – சென்னை காவல் ஆணையர்

இந்தியாவில், கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை அமல்படுத்தி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இன்று நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சென்னை காவல் ஆனையர் சந்தித்தார்.

அப்போது, “கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், சமூக இடைவெளியைக் கடைபிடித்து மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *