கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா,புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

நாட்டில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேலாக கொரோனா தொற்றுகள் பதிவாகி வருகிறது.இதனையடுத்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கேரளாவிலும் நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனையடுத்து கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

உள் அரங்கு கூட்டங்களில் 100 பேரும் வெளி அரங்க கூட்டங்களில் 200 பேரும் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடைகள் அனைத்தும் இரவு 9 மணிக்கு மூட வேண்டும் எனவும் மதக்கூட்டங்கள் நடத்துவதை தலைவர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *