காரைக்கால் திமுக வேட்பாளருக்கு கொரோனா!
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சினிமா பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று காரைக்கால் திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி பதுச்சேரி மாநில தேர்தல் நடந்து முடிந்தது.
காரைக்காலில் திவீர தேர்தல் பிரச்சாரத்தில் நாஜிம் ஈடுபட்டார்.தேர்தல் முடிந்த பிறகு சில நாட்களாக உடல் சோர்வாக காணப்பட்ட நாஜிம் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.இதனையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.