குழந்தைகள், இளைஞர்களை குறி வைக்கிறதா கொரோனா இரண்டாவது அலை?

தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலை காட்டுத்தீயாக பரவி வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையில் வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல் அலைக்கு வயதானவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அலைக்கு இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மதுரை திருப்பாலை பகுதியிலுள்ள காயத்ரி நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 7 பேரில் 4 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *