கொரோனா தடுப்பூசித் திருவிழாவும்,பிரதமர் மோடியின் நான்கு வேண்டுகோள்களும்!
நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனையடுத்து நாடு முழுவதும் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை தடுப்பூசித் திருவிழா அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த தடுப்பூசி திருவிழாவின் மூலம் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.அரசு,தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி நான்கு வேண்டுகொள்களை விடுத்துள்ளார்.
1.தடுப்பூசி போடும் ஒருவர் படிக்காத அல்லது குறைவாக படித்த அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள உதவுங்கள்
2.கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட உதவுங்கள்
3.அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்,அது மற்றவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்கும்
4.கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை வகைப்படுத்த வேண்டும்.
இந்த நான்கு வேண்டுகோள்களை அனைவரும் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.