சென்னையில் கூடுதலாக 300 முதல் 400 பேருந்துகள் இயக்கம்

தற்போது, பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த நேற்று முதல் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பேருந்துகளில் இருக்கைகளில் மக்கள் உட்கார்ந்து கொண்டு மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.

இதனால், சென்னையில் உள்ள மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் கூடுதலாக 300 முதல் 400 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

குறிப்பாக, பொதுமக்கள்‌ அதிகம்‌ பயணம்‌ செய்கின்ற, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம்‌,
கேளம்பாக்கம்‌, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்‌, மணலி, கண்ணகி நகர்‌, பெரம்பூர்‌, அம்பத்தூர்‌, ஆவடி, திருவொற்றியூர்‌ மற்றும்‌ செங்குன்றம்‌ உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலிருந்து காலை மற்றும்‌ மாலை நெரிசல்‌ நேரங்களில்‌ கூடுதல்‌ பேருந்துகள்‌ இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…