சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்ய பிரியங்கா காந்தி வேண்டுகோள்

கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாட்டில் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்பம் முதலே மாணவர்களுக்கு பள்ளிகூடம் திறப்பதும் மீண்டும் கொரோனா தொற்றின் காரணமாக மூடப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
நாட்டின் பல மாநிலங்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தன.இந்நிலையில்,தற்போது சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு களுக்கான தேர்வுகள் வருகிற மே 4 முதல் ஜீன் 10 வரை நடைபெற உள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸின் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இவ்வாறு கொரோனா சூழ்நிலையில் தேர்வு நடத்துவதன் மூலம் மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒருவேளை தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்றால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.