ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 16 வரை தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.மேலும்,வருகிற ஏப்ரல்14 முதல் ஏப்ரல் 16 வரை தமிழக்கத்தில் தடுப்பூசித் திருவிழா என்ற பெயரில் மூன்று நாட்களுக்கு தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே,முன்களப் பணியாளர்கள்,வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.அதனைத்தொடர்ந்து,45 வயது நிரம்பிய இணைநோய் உடையோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.மேலும் ஏப்ரல் 1 முதல் 45 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தற்போது இந்த தடுப்பூசித் திருவிழா என்ற முயற்சியை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.