எய்ம்ஸ் மருத்துவமனையில் 20 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி!

உலகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்தியாவிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 20 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே,தனியார் மருத்துவமனை ஒன்றில் 37 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
கொரோனா பரவலுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பெருந்தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்படுவது கொரோனா பரவுதலை தடுப்பதை மேலும் சிக்கலாக்கியுள்ளது.