பேருந்துகளில் நின்று கொண்டு செல்ல தடை – தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தற்போது புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.இந்த கட்டுப்பாடுகள் வருகிற ஏப்ரல் 10 -முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் பேருந்து பயணம் குறித்த அறிவிப்பும் வெளியானது.அதன்படி பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பயணிகள் யாருக்கும் நின்று கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர பயணிகள் இருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *