கொரோனா அதிகரித்தாலும் கட்டுப்பாடின்றி இயங்கும் டாஸ்மாக்
தமிழகத்தில் தொடர் கொரோனா பரவலின் எதிரொலியாக இன்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சிறிய கடைகள்,வழிபாட்டுத் தலங்கள்,போக்குவரத்து போன்றவைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையில் கூட்டம் அதிகம் கூடும் மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடு ஏதும் விதிக்கப்படதாது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும்,பலரும் மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.