இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட மோடி!
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் இணை நோய் கொண்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனால், மக்களில் சிலருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் உள்ளது. இதனையடுத்து பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, நம் பிரதமர் மோடியும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார். இதனைத்தொடர்ந்து, தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டுள்ளார்.