கொரோனா பரவல் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
எதிர்வரும் 4 வாரங்கள் இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மிகுந்த சவாலனதாக இருக்கும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் மாநில முதல்வர்களுடனான பிரதமர் மோடியின் இந்த ஆலோசனைக்கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.