தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும் துரைமுருகனுக்கு கொரோனா!
அண்மையில் திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது, தொற்று பாதிப்பு நெகட்டிவாக வந்தாலும் மருத்துவரின் அறிவுரைப்படி அவர் வீட்டிலேயே தன்னை தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. முன்னெச்சரிக்கையாக அவர் கொரோனாவின் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.