கொரோனா பரவலை தடுக்க சென்னையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை, தீவிரமாக பரவி வருகிறது. மேலும், தற்போது தான் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் பணிகள் காரணமாக மக்கள் அதிகமாக கூட வேண்டி வந்ததால் தொற்று பாதிப்பும் அதிகரித்தது.
தேர்தலுக்குப் பிறகு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்படும் என தமிழக செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்திருந்தார். அதன் படி, தேர்தல் முடிந்துள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணனும் தேர்தலுக்கு பின் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து, சென்னை மாநகராட்சியில் மீண்டும் காய்ச்சல் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கோட்டூர்புரம் மருத்துவ முகாமில் மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, காய்ச்சல் உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.