அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவு

கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4000-த்தை நெருங்கியுள்ளது.

சென்னையில் கொரோனா மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.மேலும்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர்,கோவை,தஞ்சாவூர் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,இன்று தமிழக அரசு மீண்டும் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா முகாம்களை அமைக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையிம் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது அதிகப்படுத்தப்படும் மேலும் தகுதியான அனைவருக்கும் கொரோனா சோதனை செய்து கண்காணிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *