கொரோனாவிலிருந்து மீண்ட சச்சின்!
கடந்த மார்ச் 27-ஆம் தேதி கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.இதனையடுத்து,சச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சமீபத்தில் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் இந்தின் லெஜண்ட்ஸ் அணியை சச்சின் வழிநடத்தினார்.சச்சின் தலைமையிலான இந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதிலும் வெற்றி பெற்றது.அடுத்து சில தினங்களிலேயே டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும்,அவருன் விளையாடிய பத்ரிநாத்,யூசுப் பதான்,இர்பான் பதான் போன்ற வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
தற்போது சச்சின் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.மேலும்,வீட்டிலேயே தன்னை சில நாட்களுக்கு தனிமைப் படுத்திக் கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.